chief minister announced compensation

நாகை மாவட்டம் பொறையாரில் போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் குடும்பத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை அதிகாலை 3 மணி அளவில் இடிந்து விழுந்ததில் 9 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 7.5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.