Chief Minister advised to control dengue
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும், டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழக அரசு, டெங்குவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
