Asianet News TamilAsianet News Tamil

முப்படைகளுக்கும் ஒற்றைத் தளபதி, ராணுவ புரட்சிக்கு வித்திடுமா..?? பகீர் கிளப்பும் எதிர்கட்சி எம்ஏல்ஏ..!!

முப்படைகளும் ஒருவரின் கையில் இருந்தால் அது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையு ம் என்று கூறி முப்படைகளுக்கும்  தனித்தனி தளபதிகளை நியமித்து, அவற்றை குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு அன்றைய பிரதமர் நேருவுக்கு ஆலோசனை கூறினார்.

chief defense posting  to be create army revelation - opposition mla explaining statement
Author
Chennai, First Published Dec 31, 2019, 2:22 PM IST

முப்படைகளுக்கும்  ஒரே தலைமை பதவி என்பது இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என மஜக பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் முப்படைகளுக்கும்  ஒரே ராணுவ தலைமை தளபதி தான் செயல்படுவார் என தீர்மானித்து , அதன் படி பிபின் ராவத் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுவரை முப்படைகளின் தலைமை பொறுப்பு குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

chief defense posting  to be create army revelation - opposition mla explaining statement

 நம் நாட்டில் ராணுவ புரட்சி நிகழ்ந்து விட கூடாது என்ற தூர நோக்கு சிந்தனையோடு அந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது.ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது, அன்றைய ராணுவ தளபதியுடன்  அவருக்கு  கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் ராணுவ கிளர்ச்சிகள்  நடைப்பெற்று அங்கெல்லாம் அரசுகள் மாறுதல்களுக்கு உள்ளாகி வந்தன. chief defense posting  to be create army revelation - opposition mla explaining statement

 அந்த நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், முப்படைகளும் ஒருவரின் கையில் இருந்தால் அது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையு ம் என்று கூறி முப்படைகளுக்கும்  தனித்தனி தளபதிகளை நியமித்து, அவற்றை குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு  அன்றைய பிரதமர் நேருவுக்கு ஆலோசனை கூறினார். அதுவே சிறந்த யோசனை என ஏற்று அப்படியே நேரு அவர்கள் அதை செயல்படுத்தினார். 

chief defense posting  to be create army revelation - opposition mla explaining statement

இந்த பின்னணிகளையெல்லாம்  மறந்து விட்டு, இன்று முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தளபதி என முடிவு செய்யப்பட்டிருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்பதே மனித நேய ஜனநாயக கட்சியின் கருத்தாகும். பிரதமருக்கும், ராணுவ தலைமை தளபதிக்கும்  துரதிர்ஷ்டவசமாக ஒரு கருத்து வேறுபாடு நிகழ்ந்தால், அதன் பின் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை கூட சிந்திக்காமல் மத்திய அரசு இம்முடிவை மேற்கொண்டது நாட்டு நலனை கருதும் அனைவருக்கும்  கவலையளிக்கிறது  என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow Us:
Download App:
  • android
  • ios