Asianet News TamilAsianet News Tamil

சிறையில் இருந்தாலும் பொங்கும் சிதம்பரம் ! 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து ஏன் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

chidambaram twitter abount NCR
Author
Delhi, First Published Oct 8, 2019, 9:22 AM IST

வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறி வசிப்பவர்களை அடையாளம் கண்டறிவதற்காக அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் (NRC) தயாரிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான இந்தப் பட்டியலில் அசாமில் உள்ள 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

chidambaram twitter abount NCR

இந்நிலையில் 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தால், அங்குள்ள மக்கள் நிச்சயமற்ற, பதட்டமான நிலையில் உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி வரும் இந்நேரத்தில் மறுக்கப்பட்டுள்ள குடிமை மற்றும் மனித உரிமைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பதிவிடப்பட்டுள்ளது.  

chidambaram twitter abount NCR

மேலும் ஒரு புறம் வங்கதேச அரசுக்கு தேசிய குடியுரிமை பதிவேட்டால் பிரச்சனை வராது என மத்திய அரசு உறுதி அளித்துள்ள நிலையில், அந்த 19 லட்சம் பேர் இன்னும் எத்தனை நாட்களுக்கு, துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் குடியுரிமை மறுக்கப்பட்ட 19 லட்சம் பேரை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்றும் அந்த பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.    

Follow Us:
Download App:
  • android
  • ios