Asianet News TamilAsianet News Tamil

ப.சிதம்பரத்துக்கு சிறை உறுதி... அடித்து கூறும் பாஜக மூத்த தலைவர்..!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ், ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என மாநிலங்களவை எம்.பி.யும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி கூறியுள்ளா

chidambaram sentence confirmed...subramanian swamy action
Author
Tamil Nadu, First Published Sep 3, 2019, 5:06 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ், ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என மாநிலங்களவை எம்.பி.யும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். 

பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் பொறாமையில் பேசி வருகின்றனர். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கில் அவர் குற்றம் செய்திருப்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. மேலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் ப.சிதம்பரத்திற்கு தண்டனை கிடைப்பது உறுதி அடித்து கூறியுள்ளார். chidambaram sentence confirmed...subramanian swamy action

அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநர், துணை நிலை ஆளுநராக நியமிக்கக் கூடாது என்று சர்க்காரியா கமிஷன் தெளிவாகக் கூறியுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பது தவறானது. சர்க்காரியா கமி‌ஷனின் அறிவுறுத்தலை தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது அவர் கூறியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ அதே நடைமுறை தான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது என நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். chidambaram sentence confirmed...subramanian swamy action

நமது பொருளாதார சூழ்நிலை சரியில்லாத நேரத்தில் தற்போது வங்கிகளின் இணைப்பை நடை முறைப்படுத்தியிருக்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் செய்த தவறை நாம் சரிசெய்யவில்லை. எனவே தற்போது நமது நிதி நிலைமை பெரும் சரிவை சந்தித்துள்ளது என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios