முதன் முறையாக திஹார் சிறையில் பிறந்தநாளை கொண்டாடும் சிதம்பரம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர் !!
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது 74-வது பிறந்தநாளை திஹார் சிறையில்தான் கொண்டாட வேண்டியது இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். 20 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சிதம்பரத்தை, நீதிமன்ற காவலில் வரும் 19-ம்தேதிவரை வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி நடந்த விசாரணையின் போது அமலாக்கப்பிரிவிடம் சரண் அடையதயாராக இருப்பதாக சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த மனு இன்று சிபிஐ நீதிபதிஅஜய் குமார் குகர் முன் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சிதம்பம் அமலாக்கப்பிரிவிடம் சரண் அடைய தயாராக இருப்பதாகத் தெரிவித்தா். அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிதம்பரத்தை காவலில் எடுக்க விருப்பமில்லை என்று தெரிவித்தார். இருதரப்பிலும் வாதங்கள் நடந்த நிலையில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இதற்கிடையே சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் வரும் 19-ம் தேதி சிதம்பரம் ஆஜர்படுத்த வேண்டும். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கின் முழுமையான விவரங்களை அறிக்கையாக ஒருவாரத்துக்குள் தாக்கல் செய்யவும் சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வரும் 16-ம் தேதி ப.சிதம்பரத்துக்கு 74-வது பிறந்தநாளாகும். இதுநாள்வரை தனது பிறந்தநாளை வீ்ட்டில் குடும்பத்தாருடன் கொண்டாடிய சிதம்பரம் இந்த முறையில் திஹார் சிறையில்தான் கொண்டாட வேண்டியது இருக்கும். ஏனென்றால், வரும் 19-ம்தேதிதான் சிதம்பரம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ உள்ளதால், சிதம்பரம் தனது 74-வது பிறந்தநாளை சிறையில்தான் கொண்டாட வேண்டியது இருக்கும். அவரின் ஜாமீன் மனுவும் 23ம்தேதிதான் விசாரிக்கப்படுகிறது.
மேலும், இந்த வழக்கில் இன்று ஆஜராகிய சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், சிதம்பரத்துக்கு வீட்டில் இருந்து சமைக்கப்பட்ட உணவை கொண்டுவர அனுமதி கோரினார். ஆனால், சிறையில் அனைவரும் ஒன்றுதான் என்று கூறி உணவு வழங்க மறுத்துவிட்டார்.