தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டகள் ஆகியோர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். பிரதான எதிர்க்கட்சியான திமுக, மக்களவை தேர்தலுக்கு அமைத்த அதே கூட்டணியுடன் போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக,கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கூட்டணி கட்சியினருக்கான இடப்பகிர்வை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பேசி முடிவு செய்ய திமுக தலைமை அறிவுருத்திருத்தி இருந்தது. தேர்தலுக்கான தீவிர பரப்புரையில் அனைவரும் செயலாற்றி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், மூன்று ஆண்டுகள் கழிந்து தாமதமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக/காங்கிரஸ் ஏனைய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அஇஅதிமுக விற்கு மாற்றாக உள்ளாட்சி அமைப்புகளில் திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். இதே போல அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.