Asianet News TamilAsianet News Tamil

#BREAKING ஊழல் வழக்கு.. சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்திராகுமாரிக்கு நெஞ்சுவலி..!

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று நீதிபதி அலிசியா தீர்ப்பளித்தார். இவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Chest pain for former minister Indira Kumari
Author
Chennai, First Published Sep 29, 2021, 1:33 PM IST

ஊழல் வழக்கில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 1991 -1996  ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அப்போது அவரது கணவர் பாபு, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்காக அறக்கட்டளை ஒன்று நடத்தி வந்தார். அப்போது சமூகநலத்துறை அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தனது கணவரின் நிறுவனத்திற்கு 15. 45 லட்சம் ரூபாய் நித ஒதுக்கீடு செய்ததாக இந்திரகுமாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

Chest pain for former minister Indira Kumari

அதே நேரத்தில் இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று அப்போதைய சமூக நலத்துறை செயலாளர் அளித்த புகாரின் பேரில் இந்திர குமாரி அவரது கணவர் பாபு உள்ளிட்ட 5 பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் சமூக அறக்கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரியாகத் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவி வகித்ததால், இவ்வழக்கில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் சாட்சியம் அளித்தார். இவ்வழக்கில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று நீதிபதி அலிசியா தீர்ப்பளித்தார். இவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Chest pain for former minister Indira Kumari

இந்நிலையில், ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்கிலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு சுவாச கோளாறு இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios