Asianet News TamilAsianet News Tamil

தமிழக பட்ஜெட்.. சென்னையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முழு விவரம்..!

சென்னையில் தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Chennai will be transformed into a city without posters.. ptr palanivel thiagarajan
Author
Chennai, First Published Aug 13, 2021, 12:57 PM IST

சென்னையில் தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் மற்றும் வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


*  சென்னையில் நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

*  சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.

*  சென்னை காவனூரில் 2வது கட்டமாக நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

*   சுத்தமான, பசுமையான சென்னையை உருவாக்கும்பொருட்டு, சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.

* சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.

*  சீர்மிகு நகர திட்டத்திற்கு 2, 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரூ. 2,056 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம்  செயல்படுத்தப்படும்.

* சென்னையில் உள்ள நீர் வழிகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் 2,371 கோடி செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

*ஆந்திர பிரேதேச கிருஷ்ணா நீர் தேக்கத்திலிருந்து சென்னை நீர் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

* சென்னை நகர கூட்டாண்மை திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்படும்.

* கணேசபுரம் சுரங்கப் பாதை, கொன்னூர் நெஞ்சாலை, தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் ரூ.135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* ஒவ்வொரு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

*  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

* ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உத்தியின் மூலமாக 400 மிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios