திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவைச் சந்தித்துள்ளதாக காவேரி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்தததையடுத்து , சென்னையில் உள்ள காய்கறிக்கடைகளில் பெண்கள் கூட்டம் இரவு நேரத்திலும் அலைமோதியது. இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென்ற வாரம் திடீரென அவரது உடல் நிலை மிகுந்த மோசமடைந்தது. ஆனால் டாக்டர்கள் அளித்த  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் கடந்த சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று மீண்டும் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
 
இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் எனற் பகீர் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் காவேரி மருத்துவமனை முன்பு  குவிந்து எழுந்து வா தலைவா என முழுக்கமிட்டபடி உள்ளனர். அதே நேரத்தில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிந்த பொது மக்களும், இல்லத்தரசிகளும் அவசர அவசரமா கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கினர்.இதனால் பலசரக்கு மற்றும் காய்கறிக்கடைகளில் இல்லத்தரசிகளின் கூட்டம் அலைமோதியது.. அவர்கள் கிலோ கணக்கில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டுள்ளனர். ஒரு வேளை கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகள் உண்மையானால், நாளி கடைகள் திறந்திருக்காது என முன்கூட்டியே யூகித்து பெண்கள் தங்களுக்கான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர்.