சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளதால் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது ,  இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் ,  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  குறிப்பாக சென்னையில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது,  அது மட்டுமின்றி கோயம்பேடு சந்தை கொரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக  மாறியதை அடுத்து சந்தை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதே இறக்கு காரணம்.   ஏற்கனவே நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள  ஊரடங்கால் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் அன்றாடம் நாட்களை கடத்துவதற்கு மக்கள் போராடி வரும் நிலையில் தற்போது அத்தியாவசிய காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது .

அதாவது சென்னை கோயம்பேடு சந்தைக்கு மக்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்ததால் அங்கு போதுமான சமூக இடைவெளி கடைபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது, பின்னர் கொரோனா  அங்கு அதிகளவில் பரவத்தொடங்கியதையடுத்து சந்தை மே 5ஆம் தேதியன்று மூடப்பட்டது ,  இதற்கிடையில் தற்காலிகமாக சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டு வருகிறது ,  எனவே காய்கறி வாரத்தை 10 தேதி வரை வியாபாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர் , இதனால் வெளிமாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து காய்கறி வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது , அதன் தாக்கமாக அவற்றின் விலைகளும் தற்போது  இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது .  தற்போது வியாபாரிகள் தங்கள் இருப்பில் வைத்திருக்கும் காய்கறிகளையே விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர் .இதே நிலை நீடித்து காய்கறிவரத்து இல்லை என்றால் சிறு சிறு காய்கறி கடைகள் மூடும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர், 

 

சென்னையில்  வியாழனன்று கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும் தக்காளி 40 ரூபாய்க்கும் பீன்ஸ் கிலோ 200 ரூபாய்க்கும் காலிபிளவர் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன ,  காய்கறி சந்தையில் தக்காளி வெங்காயம் மட்டுமே இருப்பதாகவும் அதுவும் கடுமையான விலை உயர்ந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.  மக்களிடம் வருமானம் இல்லாத சமயத்தில் காய்கறி விலை உயர்வு பெரும் சிரமத்தை உருவாக்கி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் . இதனால் நிலத்தில் விளைந்த காய்கறிகளை முறையாக விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் .  அவசரகதியில் அரசு சென்னைக்கு  சிறு சிறு லாரிகள் மூலம் காய்கறிகளை கொண்டுவந்து மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.