சென்னை ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தீயணைப்பு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவருக்கு ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. கடந்த சில நாட்களே கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, இந்த பாதிப்பு எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியாத நிலையில் சுகாதாரத்துறை திணறி வருகிறது. 

இந்நிலையில்,  ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 28 வயதான ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து, அவருக்கு ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற தீயணைப்பு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனையை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காடடி வருகின்றனர்.