Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் மழைக்கே தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை.. அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது? இபிஎஸ் விளாசல்..!

கார் பந்தயத்திற்காக அரசின் பணம் ரூ.242 கோடியை இந்த திமுக அரசு செலவிடுகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான நிதியை வழங்காமல் கார் பந்தயம் நடத்துவதற்கு நிதி செலவிடப்படுவது எதற்காக? கார் பந்தயம் நடத்துவது மக்களுக்கு எந்த லாபமும் இல்லை என குற்றம்சாட்டினார். 

Chennai is flooded with rain for one day... Edappadi palanisamy tvk
Author
First Published Dec 2, 2023, 3:02 PM IST

நிர்வாகத்திறமை இல்லாத திமுக அரசால் ஒருநாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  கார் பந்தயத்திற்காக தனி ஓடு பாதை உள்ளபோது சென்னை சாலைகளில் பந்தயம் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. கார் பந்தயத்திற்காக அரசின் பணம் ரூ.242 கோடியை இந்த திமுக அரசு செலவிடுகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான நிதியை வழங்காமல் கார் பந்தயம் நடத்துவதற்கு நிதி செலவிடப்படுவது எதற்காக? கார் பந்தயம் நடத்துவது மக்களுக்கு எந்த லாபமும் இல்லை என குற்றம்சாட்டினார். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் வச்ச குறியில் தப்பிய இபிஎஸ்.. சசிகலாவிடம் இருந்து தப்புவாரா? நாள் குறித்த சென்னை உயர்நீதிமன்றம்.!

Chennai is flooded with rain for one day... Edappadi palanisamy tvk

மேலும் இந்த போட்டியை பணக்காரர்கள் தான் பார்க்கிறார்கள். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டதாக திமுக அரசு கூறியது. ஆனால் தண்ணீரில் சென்னை மிதந்து கொண்டிருக்கிறது. நிர்வாகத்திறமை இல்லாத திமுக அரசால் ஒருநாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Chennai is flooded with rain for one day... Edappadi palanisamy tvk

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.  சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி உருவாகும். அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios