Chennai Floods: ஆபத்தில் சென்னை.. கடல் மட்டத்திற்கு கீழ் வேளச்சேரி, பள்ளிக்கரணை. சில ஆண்டுகளில் கிளவுட் பஸ்ட்.

ஒரு ஆண்டுக்கு 2.2 மில்லி மீட்டர் கடல்மட்டம் உயரமாக சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். பிறகு 3.3 மில்லி மீட்டர் என்று கூறினர், ஆனால் இப்போது ஆண்டுக்கு 5 மில்லி மீட்டருக்கு மேல் உயர்வதாக சொல்கிறார்கள், அடுத்து 2050, 2060வது ஆண்டுகளில் கடல் மட்டம் அரை மீட்டர் முதல் 2 மீட்டர் வரை உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன, 

Chennai in danger .. Velachery, pallikaranai below sea level .. also Cloud burst warning.

பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளதால் இன்னும் சில பத்தாண்டுகளில் கடல் நீர் ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பேராசிரியரும், நீரியல்வல்லுனருமான ஜனகராஜ் தெரிவித்துள்ளார். மழையை வெள்ள பாதிப்பாக மட்டும் பார்க்க கூடாது, காலநிலை மாற்றம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதற்காக எச்சரிக்கையாக பாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் விளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் என்றும் சில ஆண்டுகளில் "கிளவ்ட் போஸ்ட்"  எனப்படும், அதாவது மேக வெடிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும்  அவர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து கடந்த நான்கு தினங்களுக்கு மேலாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றனர்.அரசும் போர்க்கால அடிப்படையில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டிவருகிறது, ஆனாலும் வெள்ளம் வடிந்த பாடில்லை, இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது சென்னை வாசிகளை மேலும் கதிகலங்க செய்துள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழல் உருவாக காரணம் என்ன என்பது குறித்து நீரியல் வல்லுநரும் பேராசிரியருமான கனகராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில் கூறியுள்ள அவர், சென்னையின் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் நாம் வளர்ச்சி என்ற பெயரில் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், சாலைகள் என அமைத்து அழித்து விட்டோம். அதேபோல் சென்னையில் அறிவியல்பூர்வமாக கட்டப்படாத மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் வெள்ள நீர் தேங்குவதற்கு பெரும் காரணமாக உள்ளது. 

Chennai in danger .. Velachery, pallikaranai below sea level .. also Cloud burst warning.

சென்னையில் பெரும்பாலான ஏரி குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால், தண்ணீர் செல்ல வழி இல்லை. இப்போது இருக்கிற ஒரே ஒருஆதாரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்தான், அதன் மொத்த பரப்பளவு 50 சதுர கிலோமீட்டர், 5000 ஹெக்டேர்,  5000 ஹெக்டேர் என்றால் 12 ஆயிரத்து 500 ஏக்கர். அவ்வளவு பெரிய பரந்து விரிந்த பகுதி, குளோபல் மருத்துவமனை, சத்யபாமா யுனிவர்சிட்டி, மத்திய கைலாஷ் ஐஐடி இவையெல்லாம் சேர்ந்ததுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இது மிகவும் பரந்து விரிந்த இடம், மொத்த சென்னை மாநகரம் என்பது 471 சதுர கிலோமீட்டர், அதில்  50 சதுர கிலோமீட்டர் சதுப்புநிலம் என்றால் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு என்பதை எண்ணிபார்க்க வேண்டும். குறைந்தது 60 முதல் 70 ஏரிகளின் உபரிநீர் இந்த சதுப்பு நிலத்தில்தான் தேங்கும், ஆனால் இப்போது சதுப்புநிலத்தின் முக்கால் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.  இயற்கை கொடுத்த கொடையை அழித்துவிட்டு வளர்ச்சி என்ற பெயரில் சுற்று சூழலை அழித்த கொண்டிருக்கிறோம்.

Chennai in danger .. Velachery, pallikaranai below sea level .. also Cloud burst warning.

காலநிலை மாற்றம் மிக மோசமாக நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அது மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நடக்கப்போகிற ஆபத்துக்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும், அதாவது, ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நாட்களில் பெய்கிறது என்றால், பிறகு 20 நாட்களில் பெய்கின்ற மழை 10 நாட்களில் பெய்யும், பிறகு பத்து நாளில் பெய்ய வேண்டிய மழை 3 நாட்களிலும் 3 நாளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டிவீடும், இந்த நிலைக்குதான்  "கிளவுட் பஸ்ட் "  அப்படியென்றால் " மேக வெடிப்பு"  ஒரே நாளில் மழை கொட்டோ கொட்டென்று  கொட்டி தீர்த்துவிடும். அதை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதிகமாகி அதிகமாகி மேகக்கூட்டம் ஒரே நேரத்தில் வெடிப்பதற்கு பெயர்தான் கிளவுட் பர்ஸ்ட், இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும், இது மேற்கு தொடர்ச்சி மலை, இமயமலை போன்ற பகுதிகளில் தான் நிகழும், ஆனால் சென்னை போன்ற மக்கள் வாழ்விடங்களில் இது நடந்தால் பாதிப்பு மோசமாக இருக்கும். காலநிலை மாற்றத்தின் விளைவால் மற்றொரு புறம்  கடல்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. 

Chennai in danger .. Velachery, pallikaranai below sea level .. also Cloud burst warning.

ஒரு ஆண்டுக்கு 2.2 மில்லி மீட்டர் கடல்மட்டம் உயரமாக சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். பிறகு 3.3 மில்லி மீட்டர் என்று கூறினர், ஆனால் இப்போது ஆண்டுக்கு 5 மில்லி மீட்டருக்கு மேல் உயர்வதாக சொல்கிறார்கள், அடுத்து 2050, 2060வது ஆண்டுகளில் கடல் மட்டம் அரை மீட்டர் முதல்  2 மீட்டர் வரை உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன, அப்படி கடல் மட்டம் உயர்ந்தால் கடற்கரை என்பது மத்தியகேலாஸ்வரை வர வாய்ப்புள்ளது. அப்போது  வேளச்சேரி, பள்ளிக்கரணை அனைத்தும் முற்றிலுமாக கடலுக்குள் சென்றுவிடும், ஏற்கனவே வேளச்சேரி, பள்ளிக்கரணை கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளது,  இந்தப் பகுதிகள் நிச்சயம் கடலுக்குள் செல்லும், சென்னை மாநகராட்சியின் பல பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டருக்கு கீழே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி கூடங்கள் இதை தெரிவித்துள்ளது. இதனால் 1706 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள  தமிழ்நாட்டின் கடற்கரையை நாம் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மொத்த டெல்டா மாவட்டமும் நீரில் முழ்கும், அடுத்த முப்பது நாற்பது ஆண்டுகளில் பாதி நாகப்பட்டினம் மாவட்டம் காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது, எனவே இதை தடுக்க அனைவரும் கைகோர்த்து திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios