Asianet News TamilAsianet News Tamil

Chennai Floods: எங்கபோய் முடியபோகுதோ..திடீரென ரூட்டை மாற்றிய காற்றழுத்த மண்டலம்..சென்னையில் கரையை கடக்குமாம்.

சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai Floods: what will happen.. The barometric zone that suddenly changed the route..let's cross the border in Chennai.
Author
Chennai, First Published Nov 11, 2021, 11:23 AM IST

குறைந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் சென்னையில் கரையை கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் ஸ்ரீஹரிகோட்டா முகம் காரைக்காலுக்கு மிடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சென்னையில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என  தகவல் வெளியாகி இருப்பது சென்னை வாசிகளை கதிகலங்க வைத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. அந்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளது. இன்று மாலை காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே அது கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில்  இதன் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. சென்னையில் நேற்று மாலை பெய்ய ஆரம்பித்த மழை விடிய விடிய சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்து வருகிறது. மலை விட்டு விட்டு பெய்தாலும்  இன்னும் ஓயாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளது.

Chennai Floods: what will happen.. The barometric zone that suddenly changed the route..let's cross the border in Chennai.

பல்வேறு  பகுதிகளில் வெள்ளம் கடல் போல காட்சியளிக்கிறது.  சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தி நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அதிக அளவில் பெய்துள்ளது, வேளச்சேரி, கோடம்பாக்கம் தி.நகர், நசரத்பேட்டை,  குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அடையார், திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 
இந்நிலையில் இது குறித்து  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் தென்மண்டல ஆய்வு மைய  இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. மேலும் இது வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளார்.

Chennai Floods: what will happen.. The barometric zone that suddenly changed the route..let's cross the border in Chennai.

சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வு  மண்டலத்தின் நகரும் வேகம் 27 கிலோ மீட்டரில் இருந்து 21 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்றும், ஆனால் அது மெல்ல மெல்ல நகர்ந்து கரையை கடக்கும்போது  40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும், எனவே பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டா காரைக்காலுக்கு இடையில் கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என புதிதாக கணிக்கப்பட்டுள்ளது இது ஏற்கனவே மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios