முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கு… கிஷோர் கே சுவாமிக்கு ஜாமீன்!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாஜக ஆதரவாவளரும், சமூக ஊடகவியலாளருமான கிஷோர் கே சுவாமி திமுக குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல்… தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தாதது ஏன்? மநீம நிர்வாகி கேள்வி!!
இதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார், கிஷோர் கே சுவாமிக்கு விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது. அதில் நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்திருந்தது. ஆனால் கிஷோர் கே சுவாமி ஆஜராகவில்லை. இதனிடையே கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.! ஆளுநர் ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.! எடப்பாடி பழனிசாமி
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ் அல்லி, கிஷோர் கே சுவாமியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பாண்டிச்சேரியில் வைத்து கிஷோர் கே சுவாமியை காவல்துறையினர் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.