Asianet News TamilAsianet News Tamil

அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதிச் சீட்டு..!! சென்னை மாநகராட்சி ஆன்லைன் சேவை ..!!

அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதிச் சீட்டினை பெற பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார் .

chennai corporatin commissioner prakash announce onlince servive for token
Author
Chennai, First Published Apr 18, 2020, 4:46 PM IST

அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதிச் சீட்டினை பெற பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார் . இதனால் யாரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  நாடும் முழுவதும் கொரோனா வேகமாக பரவிவருகிறது .  இதுவரை  இந்தியாவில் 14 ஆயிரத்து 378 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில்  480 பேர் உயிரிழந்துள்ளனர் ,  அதேபோல் இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.    தமிழகத்தில் இதுவரை சுமார் 1, 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரையில் தமிழகத்தில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது , இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதை கட்டுபடித்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

chennai corporatin commissioner prakash announce onlince servive for token

 இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதிச் சீட்டினை பெற பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்நிலையில்  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-  கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்களைத் தவிர்த்து பிற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது .  அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் செயல்பட ஏதுவாக  அவற்றின் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்திற்காக தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப  நலத்துறையின் அரசாணை எண் 152 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிறுவனங்களுக்கு பொது சுகாதார சென்னை மாநகராட்சியின் சார்பில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன .  இதுநாள் இதுவரை 652 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது . 

chennai corporatin commissioner prakash announce onlince servive for token

தற்பொழுது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி அனுமதி அட்டை பெற பெருநகர சென்னை மாநகராட்சியின், www.covid19.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தின் வழியே சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி) பதிவு சான்றிதழ் நகல் ,  பணியாளர் அடையாள அட்டை நகல் ,  வாகன பதிவு சான்றிதழ் நகல் ,  மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஆகிய ஆவணங்களுடன் காலை 8 மணி முதல் பதினோரு மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவே நிறுவனங்கள் அனுமதி சீட்டு பெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து இணையதளத்திலேயே விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .  தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு இணையதளம் மூலமாகவே அனுமதிச்சீட்டு வழங்கப்படும் ,  QR கோடு போன்ற அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் மேற்படி இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என  மாநகராட்சிஆணையர் பிரகாஷ்  கேட்டுக்கொண்டுள்ளார்

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios