மாநகராட்சியின் பல்வேறு நேய் தடுப்பு  நடவடிக்கையின் காரணமாக வைரஸ் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு வைரஸ் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது ,  இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 120க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களாக இதுவரை எவ்வித வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என   சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .  சென்னை கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  அவர்களும் இன்று ராயபுரம் மண்டலம் பகுதி 12-வார்டு 62 அஞ்சநெய நகர் பழைய  ஆட்டுத் தொட்டி சாலையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு மறு பயன்பாட்டுடன் கூடிய முக கவசங்களை வழங்கினார்கள் . 

 ராயபுரம் மண்டல அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோக்களை துவக்கி வைத்தனர் .  பின்னர் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தனர்,  அப்போது பேசிய ராதாகிருஷ்ணன் ,  தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைவாழ் பகுதிகளில் உள்ள 26 லட்சம் மக்களுக்கு ஒருவருக்கு மூன்று கவசங்கள் என 50 லட்சம் முகக் கவசங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது  அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களிடையே ஒலிபெருக்கி துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் தொண்டு நிறுவனங்களை கொண்டு மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் நேரடியாகவும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .  பொதுவாக  70 முதல் 75 சதவீதம் இந்த வைரஸ் தொற்று ஏற்கனவே  பாதித்த பகுதிகளில் உள்ள இடங்களில்தான் ஏற்படுகிறது .  எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி மக்களிடையே சரியான இடைவெளியை பின்பற்றுதல் முகக் கவசம் அணிதல்  போன்றவற்றில் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறவும் . 

இவற்றின் மூலம் மட்டுமே இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் மாநகராட்சி சார்பில் அதிக வைரஸ் தொற்று  பாதித்த ராயபுரம் மண்டலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு மக்களின்  முழு ஒத்துழைப்போடு வைரஸ் பாதித்த ஒரு சில பகுதிகளில் கடந்த 8 நாட்களாக இதுவரை எந்த வித வைரஸ் தொற்றும் ஏற்பட வில்லை .  எனவே சென்னையில் வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் பகுதி வாரியாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது .  வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் தங்களுடைய இல்லங்களில் பாதுகாப்பு வசதி குறைவாக உள்ளது என கருதும் முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர நோய்வாய்ப்பட்ட  நபர்கள் அருகில் உள்ள சமுதாயக் கூடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டு அவர்களுக்கு சத்தான உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .  வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள ராயபுரம் கோடம்பாக்கம் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில்  பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வைட்டமின் மாத்திரைகள் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன . 

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் 650 குடிசை பகுதிகளோடு மொத்தம் 2,000 பகுதிகள் கண்டறியப்பட்டு  அந்தப் பகுதிகளில் பொதுமக்களிடையே முகக் கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மாநகராட்சியின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் காரணமாக வைரஸ் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு வைரஸ் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 120க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த 14 நாட்களாக இதுவரை எவ்வித வைரஸ் தொற்றும் ஏற்படாததால் அவ்விடங்கள்  இன்று முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து விற்கப்படுகின்றன என கூறியுள்ளார்.