சென்னையில் சட்டம் ஒழுங்கை காக்க நான்கு ஏடிஜிபிக்கள் , ஐஜிக்கள் உட்பட 27 ஐபிஎஸ் அதிகாரிகளை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். 


தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களின் எழுச்சியால் அவசரசட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
போராட்டம் நடத்திய மாணவர்கள் , இளைஞர்கள் மெரினாவில் லட்சக்கணக்கில் கூடி இருந்தனர். பின்னர் போலீசார் மற்றும் அரசு வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானோர் கலைந்து சென்றனர். 


போலீசாரின் தாக்குதல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. போலீசாரும் அதிக அளவில் காயம் அடைந்தனர். இந்நிலையில் கமிஷனர் ஜார்ஜின் செயல்பாட்டை சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் விமர்சித்திருந்தனர்.
கமிஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையி நேற்றிரவு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சென்னையில் அமைதி ஏற்படுத்த போலீஸ் அதிகாரிகள் 23 பேரை கமிஷனர் ஜார்ஜின் உதவிக்கு அனுப்பி வைத்தார்.


இவர்களில் ஏடிஜிபிக்கள் சைலேந்திர பாபு , ஆஷிஷ் பங்க்ரா , சஞ்சய் அரோரா , மாகாளி , கரன் சின்ஹா, ராஜேஷ் தாஸ் , சுனில் குமார் , சுனில் குமார் சிங் உட்பட 11 ஏடிஜிபிக்கள் கருணாசாகர் , ராஜீவ் குமார் , , வன்னிய பெருமாள் , சந்தீப் ராய் ரத்தோர் , டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் உள்ளிட்ட 12 ஐஜிக்களும் அடக்கம்.

இவர்களில் 11 ஏடிஜிபிக்கள் , 12 ஐஜிக்கள் அடக்கம். இவர்கள் சென்னையின் பாதுகாப்புக்காக உதவி செய்து சென்னையில் போலீசாருக்கு ஆலோசனை கூறி அமைதி ஏற்பட வழிவகுப்பார்கள். ஆனால் நேற்றிரவு அனுப்பப்பட்ட அதிகாரிகளை , எல்லாம் சரியாக இருக்கிறது என்று கமிஷனர் ஜார்ஜ் திருப்பி அனுப்பினார்.
அதன் பின்னர் மதியத்துக்கு மேல் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை கமிஷனர் ஜார்ஜ் அமைத்துள்ளார்.


இதில் சென்னையில் இணை ஆணையர்களுக்கு கீழ் இயங்கும் நான்கு மண்டலத்துக்கு நான்கு ஏடிஜிபிக்களை நியமித்துள்ளார். ராஜேஷ்தாஸ் கிழக்கு மண்டலம் விவேகானந்தர் இல்லம் , கரன்சின்ஹா -மேற்கு மண்டலம் திருமங்கலம் ஸ்டேஷன் , சைலேந்திரபாபு வடக்கு மண்டலம் பூக்கடை போலீஸ்ஸ்டேஷன், ஜெயந்த் முரளி தெற்கு மண்டலம் வடபழனி காவல் நிலையம். 
 ஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் சென்னையின் நான்கு மண்டலங்களில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உதவி புரிவார்கள் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.