Chellur Raju should be do this

சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு இதேபோல் தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விவகாரத்தில் பேசுபொருள் ஆனார் முக்கிய மந்திரி ராஜு பாய். இப்போது இந்த ஆச்சி / ஆட்சி விவகாரத்தில் வசமாக மாட்டியுள்ளார். இவர் தெரிந்து தான் சொன்னாரா இல்லை தெரியாமல் சொன்னாரோ? தற்போது தமிழகத்தில் ஒரு பிரச்சனை சைலன்ட்டாக மந்திரி ராஜூ பாய்க்கு எதிராக வெடித்துள்ளது.

ஆமாம், மூணு நாளைக்கு முன்னாடி நடந்த 'காலா' பட பாட்டு வெளியீட்டு பங்சன் சம்பந்தமா காரசார விவாதத்தில் பேசிய ராஜு பாய், " நம்ம காலா சேட் ஆட்சியைப் பிடிக்க முடியாது; ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்" என சொல்ல, இப்போது பலரும் ராஜு பாய்யை பிடித்துக்கொண்டனர்.

இதைச் சோசியல் மீடியாவுல சொல்லியிருந்தா கூட பரவாயில்ல, "அட்மின்" மீது பழியைப் போட்டுட்டு எஸ்கேப் ஆயிருக்கலாம். ஆனா ஸ்ட்ரெய்ட்டா சொல்லிட்டதால கிடுக்குப்பிடியாக காரைக்குடி நகரத்தார் சங்கத்திடம் தற்போது சிக்க, அவர்களோ தற்போது, செருப்புகளை மந்திரிக்கு கூரியரில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். (மிஸ்டர் ராஜுபாய் ஹெச். ராஜா, எஸ்.வி. சேகர் கிட்ட டியூஷன் போங்க)

இப்படியாக ஒருபுறம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் சொல்லி பாதிக்கப்பட்டவர்கள் கூறிவருகிற நிலையில் ராஜு பாய், தான் சொன்ன கருத்துக்கு இரண்டு நாள் ரூம் போட்டு டீப்பா யோசித்து ஒரு புதிய விளக்கத்தை இன்று மதுரையில் பத்திரிக்கையாளரிடம் சொல்லியிருக்கிறார். அந்த விளக்கம் எப்படி தெரியுமா இருந்துச்சி?, “இதை சட்னியினு சொன்னா மிக்சிகூட நம்பாது!” அந்த மாறி ரகளை பண்ணியிருந்தார் ராஜூ பாய். "நான் ஆச்சி என சொன்னது அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களைப் பற்றியல்ல; நான் சொன்னது நடிகை ஆச்சி மனோரமாவைத்தான் " என பொய் சொல்லக்கூட லாயக்கு இல்லாத குழந்தை போல சொன்னார் பாய் சாரி ராஜூ பாய்.

ஒரே ஒரு வார்த்த “சாரி” சொல்லியிருந்தா மேட்டர் பினிஷ், அதைவிட்டுவிட்டு நம்ம தல புதுசா விளக்கம் கொடுக்கறதா சொல்லி இப்போ செஞ்சிருக்கற வேல ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டத்துல குதிச்சாலும் குதிக்கும் போல, ஆமாம் 5 முதல்வர்களோடு பணியாற்றிக் கலைத் துறையில் ஒரு லெஜெண்டாக அறியப்படுகிற மனோரமாவையும் இரட்டை அர்த்தத்தில் இழிவுபடுத்தும் விதமாக ஒரு விளக்கமா? இவர் சொல்ற மனோரமாவே தற்போது இல்லை, அப்படியிருக்க ரஜினி என்ன மனோரமாவை கட்சியிலா சேர்க்க போறாரு?
ஏன் தான் இப்படி லாஜிக்கே இல்லாமல் வாய்விடுறாரு நம்ம ராஜூ பாய்!? பெரிய மந்திரி பதவியில இருக்குற ஒரு பெரிய மனுஷன் சமூகப் பொறுப்புணர்வோடு பேச வேண்டாமா? மிகக் கவனமாக வார்த்தைகளைத் தெரிவிக்க வேண்டும். (பாவம் மந்திரியா இருக்காப்ல இல்லன்னா எஸ்.வி. சேகர் மாதிரி தலைமறைவா இருக்கலாம், என்னத்த பண்றது அதுக்கும் இப்ப வழி இல்ல )

எதுகை மோனையாக ஏதோ கிடைக்கிறது என்கிற காரணத்துக்காக வாய்க்கு வருவதையெல்லாம் பேசலாமா? “திஸ் இஸ் பேட்” மிஸ்டர் ராஜூ பாய். தற்போது பிராயச்சித்தமாக நீங்க பண்ணவேண்டியது ஒன்றே ஒன்று இருக்கு. அது என்னன்னா? அச்சமூக மக்களிடமும் மனோரமா குடும்பத்திடமும் டைம் வேஸ்ட் பண்ணாம ஒரே ஒரு “சாரி” கேட்ருங்க!