cheif minister edapadi palanisami speech in school annual meet
ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் மணிமண்டபம் திறப்புவிழா, அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி 1967 ம் ஆண்டில் 6 ம் வகுப்பில் இந்த பள்ளியில் சேர்ந்து 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
தாம் படித்த பள்ளியிலே ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றிருந்தாலும், அந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் யாருமின்றி விழா நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
.jpg)
மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றுவதாக அறிவித்தார். நலத்திட்ட உதவி பெற வந்தவர்களும், அரசு அதிகாரிகளும்,ஆளும் கட்சியினரும் மைதானத்தை நிரப்பியிருந்தாலும் மாணவர்களே இல்லாமல் பள்ளி ஆண்டுவிழா எப்படி ஆண்டு விழாவாகும் என பலரும் கூறி வருகின்றனர்.
