டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தவர் செந்தில் பாலாஜி. இப்போது திமுகவில் இணைந்துள்ளார். 

அவர் திமுக சார்பில் அதே அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். இங்கு போட்டியிட்டு அதிமுக, அமமுகவை ஓரம் கட்ட வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தார். 21 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படும் என காத்திருந்த நிலையில்  திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் இப்போது நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். 

இதனால், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளான பூந்தமல்லி, பெரம்பூர், திருப்பரங்குன்றம், சோழிங்கநல்லூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டியாபட்டி, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், நிலக்கோட்டை ஆகிய 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

 

இந்நிலையில், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் செந்தில்பாலாஜிக்கு இடைத்தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் வழங்கப்படலாம். அல்லது எம்.பி சீட் வழங்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், சொந்தத் தொகுதியான அரவக்குறிச்சியில் களமிறங்க முடியாதது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.