Asianet News TamilAsianet News Tamil

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயிக்க போகும் கூட்டணி எது..? புதிய கருத்துக்கணிப்பில் பரபர தகவல்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

changing Trent in tamil Nadu... Which alliance is going to win the election..? new pre poll survey..!
Author
Delhi, First Published Mar 24, 2021, 10:15 PM IST

 ஐந்து மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என பல்வேறு ஊடகங்களும் நிறுவனங்களும் தொடர்ந்து கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் டைம்ஸ் நவ் - சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக-தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. என்றாலும் பிரதான போட்டி திமுக - அதிமுக கூட்டணி இடையே மட்டுமே உள்ளது.

changing Trent in tamil Nadu... Which alliance is going to win the election..? new pre poll survey..!
இந்நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும், யார் முதல்வராக வருவார் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17 முதல் 22 வரை நடந்த இந்தக் கருத்துக்கணிப்பில் 8,709 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 46 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 34.6 சதவீத வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 4.4 சதவீத வாக்குகளையும், அமமுக கூட்டணி 3.6 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.changing Trent in tamil Nadu... Which alliance is going to win the election..? new pre poll survey..!
இதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 173 - 181 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதிமுக கூட்டணி 45 முதல் 53 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிப்பு தெரிவிக்கிறது. மக்கள் நீதி மய்யம் 1 முதல் 5 தொகுதிகளையும், அமமுக 1 முதல் 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. முதல்வர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் சரியான நபர் என்று 43.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி என்று 29.7 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்

Follow Us:
Download App:
  • android
  • ios