நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இன்று இணைந்தது. அதிமுக தலைமை கழக அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்ததாக அறிவித்தனர். 

அணிகள் இணைப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அணிகள் இணைந்ததற்கு அம்மான் ஆன்மா வழிவகுத்தது என்றும், எதிர்கட்சிகளை அதிமுகாவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அணிகள் இணைப்புக்கு பிறகு எந்தவித கருத்துவேறுபாடின்றி ஒன்றாக செயல்படுவோம் என்று கூறினார்.

அணிகள் இணைப்புக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த நிதி மற்றும் வீட்டு வசதித்துறை பறிக்கப்பட்டுள்ளது. 

செங்கோட்டையன், சேவூர் ராமசந்திரனிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மாஃபா. பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லிய மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவி. சண்முகத்துக்கு, சுரங்கம் மற்றும் கனிவளத்துறை வழங்கப்பட்டுள்ளது. ராதாகிருண்னுக்கு கால்நடை துறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆளுநர் மாளிகையில் மாலை 4.30 மணியளவில் நடைபெறும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.