Asianet News TamilAsianet News Tamil

உருகிக் கசிந்த சிவன்... இது தோல்வியல்ல, கற்றலுக்கான நேரம் என ட்வீட் போட்ட கமல்..!

பிரதமர் மோடி கடைசிவரை போராடிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல. ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தில் விலைமதிப்பற்றக் கற்றலுக்கான தருணம் இது.

Chandrayaan-2 Moon Landing...kamal twitter
Author
Tamil Nadu, First Published Sep 7, 2019, 11:42 AM IST

இது தோல்வியல்ல, கற்றலுக்கான நேரம். விரைவில் சந்திரனை அடைவோம், இஸ்ரோவை நாடே நம்புகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வை நேரலையில் காண, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். Chandrayaan-2 Moon Landing...kamal twitter

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், பூடானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு திரண்டிருந்தனர். விஞ்ஞானிகள் மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்க, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. ஆனால் திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை. இதை இஸ்ரோ தலைவர் சிவன் தடுமாற்ற குரலில் அறிவித்தார். Chandrayaan-2 Moon Landing...kamal twitter

இதையடுத்து, பிரதமர் மோடி கடைசிவரை போராடிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல. ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தில் விலைமதிப்பற்றக் கற்றலுக்கான தருணம் இது. நாம் விரைவில் நிலவில் இருப்போம். இஸ்ரோவுக்கு நன்றி. இந்த நாடு உங்களை நம்புகிறது, பாராட்டுகிறது என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios