Chandrababu Naidu threatens edappadi
தனியார் நிறுவன பாலில் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. உயிரை மாய்த்து கொள்வதாக கூட சவால் விட்டார்.
ஆனால் அதன்பிறகு, என்ன ஆனதோ தெரியவில்லை, அதுபற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். உண்மையில் அவரை தனியாக அழைத்து முதல்வர் டோஸ் விட்டதன் காரணமாகவே அவர் அடங்கியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் விநியோகம் ஆகும் தனியார் நிறுவன பாலில், ஆந்திர முதல்வருக்கு சொந்தமான ஹெரிடேஜ் பால் முக்கியமான ஒன்றாகும்.
தற்போது, ராஜேந்திர பாலாஜி கூறியதால் கொதிப்படைந்துள்ள, தனியார் பால் விற்பனை நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவை சந்தித்து இந்த விவகாரத்தை எடுத்து கூறியுள்ளனர்.
அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அழைத்த முதல்வர், இந்த ஆட்சி தொடர்ந்து, நீங்கள் அமைச்சர் பதவியில் தொடர வேண்டும் என்ற எண்ணம் இல்லையா? என்று கேட்டுள்ளாராம்.
நாமே ஆட்சியை காப்பாற்ற கடுமையாக போராடி கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நீங்கள் தேவை இல்லாத சர்ச்சையை எதற்காக கிளப்பி வருகிறீர்கள்.
சந்திரபாபு நாயுடுவிடம் இருக்கும் பணத்திற்கும், செல்வாக்கிற்கும், ஒரு பத்து எம்.எல்.ஏ வை விலை பேசி வாங்கி விட்டால், நம் கதி அதோ கதிதான். அதனால், கொஞ்சம் வாயை திறக்காமல் இருங்கள் என்று ராஜேந்திர பாலாஜியை டோஸ் விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மவுனம் கடைபிடிப்பதாக சொல்லப்படுகிறது.
