சந்திரபாபு நாயுடுக்கு அடுத்தடுத்து இடி..! அடுத்து என்ன..? அதிர்ச்சி தகவல்..!   

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது வசித்துவரும் வீடும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தலைநகராக அமராவதியில் பல பணிகள் நடந்து வருகிறது. இந்த இடத்தில் முதல்வருக்கான அதிகாரபூர்வ இல்லம் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தது. இதன் காரணமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ட வல்லியில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் லிங்கம நேரி  ரமேஷ் என்பருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார் 

இந்நிலையில் இந்த வீட்டிற்கு அருகே அரசு செலவில் பிரஜா வேதிகா என்ற பெயரில் ஒரு அரங்கமும் கட்டப்பட்டது. இந்த அரங்கம் விதிகளை மீறி ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டதாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அதனை அகற்றியது. 

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு வசித்துவந்த வீடும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணா ஆற்றில் இருந்து 100 மீட்டருக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு வீட்டை காலி செய்ய வேண்டும் அல்லது  ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு முதலே சந்திரபாபு நாயுடு வசித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.