ஓடினார் ஓடினார் இந்தியாவின் நாலாப்பக்கம் ஓடினார்.. 

மத்தியில் ஆளும் பாஜக வை அகற்றுவதற்கு எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். ஆனால் ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி சட்டசபை தேர்தலும் நடந்தது. இந்த இரண்டு தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தற்போது முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்திலுள்ள 25 தொகுதியிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சென்ற தேர்தலில் 16 இடங்களை தெலுங்கு தேசம் பெற்று இருந்தது ஆனால் இந்த முறை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. இது தவிர்த்து மாநிலத்திலும் ஆட்சியை இழக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான கட்சி.

மொத்தமுள்ள 125 தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை பெற வேண்டும். ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 144 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு கட்சி வெறும் 30 தொகுதிகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் கர்நாடகம் கேரளா என அனைத்து மாநிலத்திற்கும் ராப்பகலா மும்முரமாக வேலை பார்த்து வந்த சந்திரபாபுவுக்கு இப்படி ஒரு நிலைமையா என அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் அடிமட்ட பொதுமக்கள் வரை விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன்மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு அட்லீஸ்ட் ஒரு தொகுதியாவது கிடைக்குமா என்பதே பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது இதுதான் அரசியல் திருப்பு முனையோ?