Asianet News TamilAsianet News Tamil

ஜெகன் மோகன் விட்டு வைத்தாலும் விரட்டியடித்த இயற்கை... வீட்டை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு..!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் கிருஷ்ணா நதிகரையோரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
Chandrababu Naidu leaves home
Author
Andhra Pradesh, First Published Aug 15, 2019, 12:23 PM IST

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் கிருஷ்ணா நதிகரையோரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
 
லிங்கனேரி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த பங்களாவில் 4 ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வருகிறார். சந்திரபாபு நாயுடு வசிக்கும் பங்களா கிருஷ்ணா நதிகரையோரத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து நதியோரத்தில் சந்திரபாபு நாயுடு கட்டிய கட்சி அலுவலகத்தையும் இடித்தது.  பங்களாவில் இருந்து சந்திரபாபு நாயுடு காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியது.Chandrababu Naidu leaves home

கிருஷ்ணா நதிகரையோரத்தில் 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற விதியை மீறியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்தது. ஆனால் பங்களாவை சந்திரபாபு நாயுடு காலி செய்யாமல் அங்கேயே வசித்து வருகிறார். இந்த நிலையில் மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் நதியோரத்தில் உள்ள சந்திரபாபு நாயுடு பங்களாவில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து தரை தளத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் முதல் மாடிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வெள்ளம் அதிகளவு வந்ததால் சந்திரபாபு நாயுடு வீட்டை விட்டு வெளியேறி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்றார். பங்களாவுக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க 10 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உள்ளனர்.

கிருஷ்ணா நதி கரையோரத்தில் உள்ள பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கிருந்த பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

Follow Us:
Download App:
  • android
  • ios