தெலுங்கானா மாநிலத்தில், தெலங்கானா ராஷ்ட்டிய சமீதி கட்சித்  தலைவர் சந்திரசேகர ராவ், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக  பதவி வகித்து வருகிறார். வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கையுடைய சந்திரசேகர ராவ்  அவ்வப்போது, அவர் செய்யும் செயல்களால் பரபரப்பாக பேசப்படுவார். 

இந்நிலையில், தான் பிறந்த சொந்த கிராமமான, சித்திபேட் மாவட்டத்தில் உள்ள சின்டமடகா கிராமத்திற்கு சென்ற அவர், ஒரு நாள் பொழுதை அங்குள்ள மக்களுடன் கழித்தார். பின் அவர் அறிவித்த அறிவிப்பு, அனைவரையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.வைத்தது. 

அதாவது, அந்த மாவட்ட மக்களுக்கென சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமை அறிமுகம் செய்த அவர், உடல் நலக்கோளாறு ஏற்படும் நபர்களுக்கு அரசின் செலவின் சிகிச்சை அளிக்கப்படும் என்றார். 

மேலும், தான் பிறந்த கிராம மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்ததாக கூறிய அவர், அங்கு வசிக்கும், 2,000 குடும்பங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். 

அதன் படி, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா 10 லட்சம் ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படும் என்றார். இதன் மூலம், அந்த கிராம மக்கள் மிகப் பெரிய பலன் அடைய முடியும் என்றார். 

பால் பண்ணை, கோழிப்பண்ணை, டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகள் வாங்க இந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை பயன்படுத்திக் கொள்ள சந்திரசேகர ராவ் அந்த கிராம மக்களிடம் அறிவுறுத்தினார்.

தற்போது ந்த நிதி, பணமாக வழங்கப்படுமா அல்லது வேறு ஏதேனும் அரசு நலத்திட்டங்களின் கீழ் பலனடையும் வகையில் வழங்கப்படுமா என தெளிவாக அறிவிக்கவில்லை.