இந்தியாவில் பாஜகவை வீழ்த்தி ஒரு மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்றும், அதற்காக எதிர்க்கட்கிள் அனைத்தையும் ஒன்றிணைப்போம் எனவும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பா.ஜ.,வுக்குஎதிராக, நாடுமுழுவதும்உள்ளஎதிர்க்கட்சிதலைவர்களைஒருங்கிணைக்கும்பணியில்சந்திரபாபுநாயுடுஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ்தலைவர்ராகுல், தேசியவாதகாங்கிரஸ்தலைவர்சரத்பவார், தேசியமாநாட்டுகட்சிதலைவர்பரூக்அப்துல்லாஆகியோரைசந்தித்து, கூட்டணிதொடர்பாகவிவாதித்துள்ளார். இவர்களைதொடர்ந்து, ஸ்டாலினைசந்தித்துபேச, இன்றுசந்திரபாபுநாயுடு, சென்னைவந்தார்.
ஆழ்வார்பேட்டையில்உள்ள, ஸ்டாலின்வீட்டுக்குசென்றஅவர், ஸ்டாலினைசந்தித்தார். இருவரும், நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.,வுக்குஎதிராக, தேசியஅளவில், மெகாகூட்டணிஅமைப்பதுதொடர்பாக, ஆலோசனைநடத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது என்றும், எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாஜக அரசு ஆர்பிஐ, சிபிஐ போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும், இந்த ஆட்சியை வீழ்த்துவது தொடர்பாக ராகுல், தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்நது மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து மறைந்த கருணாநிதியுடன் தனக்கு நெருக்கமான உறவு இருந்தது என்றும், தற்போது பாஜக ஆட்சியை வீழ்த்த ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
