இப்போது எனது கொள்கைகளை, திட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இதே திட்டங்களை ஏறுக்கொள்வீர்களா? என ரஜினி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’மக்கள் அதிசயம், அற்புதத்தை நிகழ்த்து நிகழ்த்துவார்கள். நீங்கள் படித்தவர்கள். பாமரர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.  பாமர மக்களுக்கு இந்த அரசியல்வாதிகளின் உள்நோக்கம் தெரியவில்லை. தமிழ்நாட்டுக்காக தமிழ் மக்கள் புரட்சி நடத்திக் காட்ட வேண்டும். புரட்சி வெடிக்க வேண்டும். நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். இது நடக்கவில்லை என்றால் சும்மா அரசியலுக்கு என்ன நடந்துவிடப்போகிறது. 10 அல்லது 20 சதவிகித வாக்குகளை பெற பிரிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவேண்டுமா? அதற்கு நான் தேவையே இல்லை. நான் ஒன்றும்  வயசு 44, 50 வயதில் அரசியலுக்கு  வரவில்லை. இப்போது 72 வயதாககிறது. 2021 தேர்தலை விட்டால் 2026ல் தேர்தல் வரும். அப்போது எனக்கு 75 வயதாகி விடும். அப்போது எனது உடல் நலம் சரியாக இருக்குமா? என்பது எனக்கு தெரியாது.

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் உணர வேண்டும். இப்போது எனது கொள்கைகளை, திட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இதே திட்டங்களை ஏறுக்கொள்வீர்களா? அப்போது மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்? அதற்கு நான் எதற்காக இப்போது அரசியலுக்கு வரவேண்டும்?  வந்தால் நாம் முதலமைச்சரை உருவாக்க வேண்டும். 
 
நான் போட்டுள்ள மூன்று திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். இந்த விஷயத்தை மூலை முடுக்கு எல்லாம் மக்களிடம் பற்றி சொல்லி கொடுங்க. இது இந்தியா முழுக்க பரவலாக வேண்டும். இளைஞர்கள் வரணும். நாற்பது நாற்பத்தைந்து வயது இளைஞர்கள் வரணும். அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் புதிய நிலைமையை உருவாக்க வேண்டும். உங்கள் கையில்தான் இருக்கிறது. ஒரே முழக்கம் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம். இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.