Asianet News TamilAsianet News Tamil

அவராகவே தான் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார்.. இதை பெரிதுபடுத்தாதீங்க.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..!

அமைச்சர் ராஜகண்ணப்பன் அருகில் இருக்கும் சோபாவில் அமருங்கள் என 3 முறை கூறினார். அந்த நாற்காலி சற்று இடைவெளியிலும், இடையில் சிலையும் இருக்கிறது. எனவே, இது எனக்கு வசதியாக இருக்கிறது எனக் கூறி, அங்கிருந்த மற்றொரு இருக்கையை நானேதான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். நான் பணிந்துபோய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே.

chair controversy issue...minister raja kannappan explain
Author
Chennai, First Published Aug 3, 2021, 12:15 PM IST

போக்குவரத்துறை அமைச்சருடன் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில் இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கடந்த 31-ம் தேதி அவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது சோபா நாற்காலியில் அமைச்சர் ராஜகண்ணப்பனும் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது பெரும் பேசும் பொருளாக உருவாகியுள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

chair controversy issue...minister raja kannappan explain

இதற்கு பதிலளித்த திருமாவளவன்;- அமைச்சர் ராஜகண்ணப்பன் அருகில் இருக்கும் சோபாவில் அமருங்கள் என 3 முறை கூறினார். அந்த நாற்காலி சற்று இடைவெளியிலும், இடையில் சிலையும் இருக்கிறது. எனவே, இது எனக்கு வசதியாக இருக்கிறது எனக் கூறி, அங்கிருந்த மற்றொரு இருக்கையை நானேதான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். நான் பணிந்துபோய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே.

chair controversy issue...minister raja kannappan explain

குதர்க்கவாதிகள், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேறு பூச வேண்டும் என நினைக்கிறார்கள். இதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன். என் நலனில் அக்கறை கொண்டவர்கள் விமர்சித்தால் அதற்கு பதில் சொல்வேன். எனது அம்மா முன்னால் கைகட்டி நிற்பேன். எனது தோழர்கள் முன்னால் கைகட்டி நிற்பேன். இது என்னுடைய மேனரிசம் அது. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களது இயலாமை, ஆற்றாமையை காட்டுகிறது என விளக்கமளித்திருந்தார். 

chair controversy issue...minister raja kannappan explain

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்;- நண்பரான திருமாவளவன் அவராகவே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios