நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திநாத் குமார் போடியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர்.

மக்களவைத் தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் தனது குடும்பத்தினருடன் சென்று பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரை சந்தித்தார். அப்போது தனது அகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று பலியுறுதிதியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனது தேர்தல் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்ட  ரவீந்திராநாத், விமானம் மூலம் சென்னை வந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க பாடுபடுவேன். மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை என்றார். அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் என்ன சொல்கிறார்களோ, அவர்களது ஆலோசனைப்படி நடப்பேன் என்றும்  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.