Asianet News TamilAsianet News Tamil

நமக்கு அவர்கள் கிடைத்தது வரப்பிரசாதம்தான்...! யாரை புகழுகிறார் பொன்னார்...?

தமிழக பாஜக தலைவர்கள், தகுதி உள்ளவர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்றும், இது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெருமைபட கூறியுள்ளார்.

Central Minister Pon Radhakrishnan praises Tamil Nadu BJP leaders
Author
Tamil Nadu, First Published Oct 31, 2018, 12:22 PM IST

தமிழக பாஜக தலைவர்கள், தகுதி உள்ளவர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்றும், இது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெருமைபட கூறியுள்ளார். Central Minister Pon Radhakrishnan praises Tamil Nadu BJP leaders

பாஜக செயல் வீரர்கள் கூட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதி பெற்றவர்களாக வளர்ச்சியடைந்து உயர்ந்து வருகிறார்கள்.  Central Minister Pon Radhakrishnan praises Tamil Nadu BJP leaders

இது தமிழகத்திற்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேம்படுத்துகிற நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருகிறேன். இதுவரை 21 இடங்களுக்குச் சென்று இந்த செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறேன். டெங்கு மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறவில்லை. மேலும் அதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். பாஜக தலைமையில் கூட்டணியா? அல்லது மற்ற கட்சிகள் தலைமையில் கூட்டணியா? என்பதை பின்னர் முடிவு செய்வோம் என்றார். 

தமிழகத்தில் யாராக இருந்தாலும் எங்கள் பெயரைச் சொல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. தமிழக அரசின் செயல்பாடுகள் முன்பை விட முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும்போதுதான் தமிழகம் வளர்ச்சியின் உச்சத்தை அடையும் என்று பொன்னார் கூறினார்.

 Central Minister Pon Radhakrishnan praises Tamil Nadu BJP leaders

தமிழக பாஜக தலைவர்கள் என்றாலே உடனே நம் நினைக்கு வருபவர்களில் ஹெச்.ராஜா. உயர்நீதிமன்றம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறித்து அண்மையில் அவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையான நிலையில், தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது குறிப்படத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios