90 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தகவல் தெரிவித்துள்ளார் .  பாஜக ஆட்சிக்கு வந்த போது பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தது ,  இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ,  ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் மீட்க்கப்படும்  என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.

இந்நிலையில் தேர்தல் நேரத்தின்போது கொடுத்த   வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன ,  இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களைப் பற்றிய  புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமித்ஷா,   தேர்தல் நேரத்தில் பாஜக கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்றார்,  தொடர்ந்து பேசிய அவர்,   மக்களுக்கு  நல்லது எதுவோ அதை பிரதமர் மோடி செய்து வருகிறார்  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது ,  அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது ,  அயோத்தி பிரச்சனை தீர்க்கப்பட்டது, 

முத்தலாக் நீக்கப்பட்டுள்ளது  என தெரிவித்த அவர் ,  பல்வேறு பிரச்சினைகளில் பிரதமர் தெளிவான முடிவுகளை எடுத்து வருகிறார் என்றார்.   அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பிரதமர் செயல்பட்டு வருகிறார் ,  ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் என்ன நடக்கும் ,  எப்படி நடக்கும் மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை எல்லாம் கவலைப்படாமல் மக்களுக்கு எது நல்லதோ அதை பிரதமர் செய்து வருகிறார் என்றார் .