காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, தமிழகத்தை வஞ்சிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூய்மை இந்தியா திட்டத்தினை தமிழிசை சௌந்தரராஜன், சென்னை, ராயப்பேட்டையில் இன்று துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதிநீர் விவகாரத்தில், பாஜக தமிழகத்தை வஞ்சிக்காது என்று கூறினார். 

தமிழக அரசு நிர்வாகம் தொடர்பாக ஆளுநர் (பொறுப்பு) வித்தியாசாகர் ராவ் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றும் தமிழிசை சௌந்தரரான் கூறினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள், ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம் என்றும், இலக்கா தொடர்பான கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்டாரா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளது ஏற்புடையதாக இல்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.