central govt discussion about gutka issue

பான், குட்கா விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசிடம், மத்திய அரசு அறிக்கை கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜயபஸ்கர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார் உள்ளிடோர் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த பிரச்சனை ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியானதும், சட்டசபையிலும் இது எதிரொலித்தது.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த பிரச்சனையை சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. பின்னர் வெளிநடப்பு செய்த திமுகவினர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தற்போது இந்த விவகாரம் பெரிதாவதை அடுத்து மத்திய அரசு இதில் தலையிட முடிவு செய்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தனது துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆலோசனையின் முடிவில் மத்திய அரசு தமிழக அரசிடம் பான் குட்கா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

பான், குட்கா போன்ற போதைபொருட்கள் விற்பனையை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதிகமாக குட்கா புழக்கம் இருப்பதாகக் கூறப்படும் மாநிலங்கள் தீவிர கண்காணிக்கபட்டு வருகிறது.

தற்போது இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில் அது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கலாக போய் முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.