central government will help tamilnadu said prime minister modi
கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
தினத்தந்தி பவளவிழாவில் தமிழில் வணக்கம் கூறி பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். மூத்த பத்திரிகையாளரான மோகனின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்.
இன்று காலை பிரதமர் சென்னை வந்தவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடத்தில் முதல்வர் பழனிசாமி முன்வைத்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
