கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை சுற்றி கூட்டம்  சேருவது  அனுமதிக்கப்படாது எனவும் சடலத்தைத் தொட்டு அழக்கூடாது உள்ளிட்ட பல்வேறு  நடைமுறைகளை மத்திய  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .  மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றினால் நோய்த் தொற்றில் இருந்து  ஏற்படும் ஆபத்தை தடுக்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது . இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  526 ஆக உயர்ந்துள்ளது சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இந்நிலையில் வைரசால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது :-  இந்நிலையில்  கடந்த மார்ச் 14-ஆம் தேதி டெல்லியில் கொரோனா வைரஸுக்கு பலியான பெண்ணின் உடலை தகனம் செய்வதில் சில மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது ,  அதுமட்டுமல்லாமல் உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தத்துடன் உடலை தகனம் செய்ததால் தாங்களையும் வைரஸ் தாக்குமோ என அச்சம் தெரிவித்தனர். 

இந்நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ரன்தீப்  குலோரியா கொரோனா வைரஸ் சுவாச குழாய் வழியாக பாதிப்பதால் இறந்தவரின் உடல் வழியாக  அது மற்றவர்களுக்கு பரவாது என்றார் ,  இந்த வைரஸ் மற்றவர்களுக்கும் பரவ வேண்டும் என்றால் இருமல் அவசியம் எனவே பாதிக்கப்பட்ட உடல்களை தகனம் செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை என்றார் .  இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது .  இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயால் இறந்த உடல்களை தகனம்  செய்வதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது .  இந்த வழிகாட்டுதல்,  பிரதேசத்தை கொண்டு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் இறுதிச் சடங்கின்போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.  அதாவது கொரொனா வைரசால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்யும்போது எந்த வகையிலும் உடலை தொடாதவாறு செய்யும்  மதச் சடங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. 

 மத முறைப்படி சடலத்தை தொடாமல்  மத வேதங்களை படித்தல் ,  புனித நீரை தெளித்தால் ,  அல்லது தகனத்தில்போது நிகழ்த்தப்படும் இதர சடங்குகள் செய்துகொள்ளலாம்,   மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இறந்தவர்களின் முகத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .  ஆனால் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கப்பட்ட உரையில் வைப்பதுடன் ,  சடலத்தை தொடுவது,  அல்லது சடலத்தை குளிப்பாட்டுவது ,  சடலத்தை முத்தமிடுவது ,  கட்டிபிடிப்பது போன்றவற்றிற்கு முற்றிலும் அனுமதி இல்லை என்றும் இதை அங்குள்ள ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் .  உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் தகனம் செய்த பின்னர் கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும் .  அதேபோல் உடலை எரித்த பின்னர் அந்த சாம்பல்  எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு .  (ஏனெனில் சாம்பலில் எந்தவிதமான வைரஸும் பரவாது என கூறப்பட்டுள்ளது) அதேபோல் தகனம் செய்யும்போது இறுதி ஊர்வலத்தின்போதும்  பெரிய கூட்டங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது . 

ஏனெனில் தொற்றுநோய் பரவுவதற்கான அச்சுறுத்தலை அது ஏற்படுத்தக்கூடும் என்பதால் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .  இதேபோல் பிரேத பரிசோதனைகளுக்காக வழிகாட்டுதல்களையும் சுகாதாரத்துறை வழங்கியுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .