அனைத்து மருத்துவமனைகளுக்கும் தடையின்றி ஆக்சிஜன் வழங்குவதை உறுதி  செய்யவேண்டுமென  வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் பிரிவான பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரிவான பெசோவுக்கு  மத்திய அரசு உத்தரவிட்டது .  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது , இதுவரை  இந்தியாவில் வைரஸ் பார்த்தவர்கள் எண்ணிக்கை  700ஆக உயர்ந்துள்ளது . இதுவரை 18  பேர் உயிரிழந்துள்ளனர் இந்நிலையில் நாடு முழுவதும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .  பிரதமர் மோடி ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் . மாநில அரசுகளும் ஊரடங்கை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  வைரஸை தடுக்கும் வகையிலும் வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு  சிகிச்சை வழங்குவதிலும் மேலும் அந்த வைரஸ் மற்றவருக்கு பரவாமல் இருப்பதில்லை அரசுகள் கவனமாக இருந்தது வருகின்றன. 

அதேபோல் நோய் தாக்கம் அதிகமாகும் பட்சத்தில் பாதிக்கப்பட்டுவோருக்கு  சிகிச்சை அளிக்கும்  வகையில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள்,  கையுறைகள் முகக் கவசங்கள் வெண்டிலேட்டர்கள்  போன்றவற்றை போதுமான அளவிற்கு தயார்படுத்திவைக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   இந்த வைரசால்  4 முதல் 5%  பேர்  மிக மோசமான நிலைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க  அதிக அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என்பதால் வென்டிலேட்டர்களை  கொள்முதல் செய்வதில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன .  அதேபோல் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன்  தடையின்றி  கிடைக்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.  இந்நிலையில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான பெசோ அமைப்புக்கு  மருத்துமனைகளில் தடையின்றி ஆக்சிஜன்  வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது .  அதேபோல மருத்துவ  ஆக்சிஜனை போதுமான அளவிற்கு சேகரித்து  வைக்கவும் சேகரித்து வைப்பதற்கான  உரிமங்களை வழங்குவது மற்றும் அதற்கான காலநீட்டிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி  உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில்  பெசோ அதன் அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது என மத்திய அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது .  இந்நிலையில் பெசோ அமைப்புடன் அனைத்து மாநிலங்களின் முதன்மை செயலாளர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் .  மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும்  நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை தடையின்றி கிடைக்கவும்  மற்றும் அதற்கான போக்குவரத்து மற்றும் கூடுதலாக உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது .  அதேபோல 31 ஆம் தேதி  காலாவதியாகும் ஆக்ஸிஜன் மற்றும்  போக்குவரத்து வாகனங்களில் உரிமங்களை  அடுத்த மூன்று மாதத்திற்கு காலநீட்டிப்பு செய்யவும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது .  ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டும் எல்பிஜி போன்றவற்ற  சிலிண்டர்களையும் போதுமான அளவிற்கு இருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது .