கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிரந்தரமாக நிறுத்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, கடந்த மார்ச் 31ம் தேதி வரை ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ2000 நோட்டுக்கள் புழக்கத்தில் விடாமல் ஒரு சில வங்கிகளில் டெப்பாசிட் செய்ய சொன்னதாக தகவல்கள் பரவியது. அதனால் புழக்கத்தில் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.ரூ2000 நோட்டுக்கள் ஆரம்பித்தில் இருந்தே இது தற்காலிகமானது எப்போது வேண்டுமானாலும் இந்த நோட்டுக்கள் திரும்ப பெறப்படலாம் என்கிற தகவல்கள் வெளியானது.


சீனா வுகான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவியதால் அந்த பகுதியில் அமைந்திருந்த வங்கிகளில் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டக்கள் அனைத்தும் எரிக்கப்பட்டது. பொதுமக்கள் பணத்தை அன்றாடம் பயன்படுத்துவதால்  அதன் மூலம் கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.