இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போதே கேள்விகளை எழுப்பியிருந்தார். அமைச்சர்களை விட எம்எல்ஏ முக்கியமானவரா? அமைச்சர் அறையில் புகைப்படத்தை வைக்க உதயநிதி என்ன சூப்பர் முதலமைச்சரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த வாரம் ஆளுநரை சந்தித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த புகார் மனுவின் கடைசி அம்சம் குறித்து வெளியான தகவலால் தான் கோட்டை வட்டாரங்கள் தற்போது கிறுகிறுத்துக்கிடக்கின்றன.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சென்னையில் அரசு சார்பில் கொரோனா நிவாரண முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை ஓரம் கட்டிவிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ரிப்பன் வெட்டி அந்த முகாமை துவக்கி வைத்தார். இது தவிர முக்கியமான அமைச்சர் ஒருவர் தனது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்திற்கு அருகே உதயநிதி ஸ்டாலின் படத்தையும் வைத்திருந்தார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போதே கேள்விகளை எழுப்பியிருந்தார். அமைச்சர்களை விட எம்எல்ஏ முக்கியமானவரா? அமைச்சர் அறையில் புகைப்படத்தை வைக்க உதயநிதி என்ன சூப்பர் முதலமைச்சரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதனிடையே மிக முக்கியமான துறை ஒன்றை கவனிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனையின் போது, கிச்சன் கேபினட்டிற்கு என்று மாதம் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதே போல் வெளிநாடு மற்றும வெளிமாநில தொழில் நிறுவனங்கள் முதலமைச்சரின் மிக முக்கிய உறவினர் ஒருவர் மூலமாகவே தொழில் சார்ந்த விஷயங்களுக்கான ஒப்புதலை பெற முடிவதாக ஒரு புகார் உள்ளது. இதேபோல் அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் பணியிடமாற்றத்திலும் அமைச்சர்களை தாண்டி வேறு சில அதிகார மையங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தகவல்கள் பரவின. பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்ற பணிகளுக்காக இதுநாள் வரை கோட்டையை சுற்றி வந்த அதிகாரிகள் தற்போது ஒரு சில முக்கிய பிரமுகர்களின் வீடுகளை சுற்றி வருவதாகவும் செய்திகள் கசிந்தன.

இந்த நிலையில் கடந்த வாரம் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவில், தமிழகத்தில் அல்ட்ரா கான்ஸ்டிடியூசனல் பவர்ஸ் இருப்பதாக ஒரு புகாரையும் கூறியிருந்தார். அதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு கான்ஸ்டிடியூசனல் அந்தஸ்து அதாவது அரசியல் சாசன அந்தஸ்து கொடுக்கப்படுவதாக புகாரில் எடப்பாடி குறிப்பிட்டிருந்தார்.அதோடு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த அரசு எந்திரத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் சாசன அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள தனி நபர்கள் அதிகார மையமாக செயல்படுவதாகவும் எடப்பாடியார் தெரிவித்திருந்தார்.

இது எடப்பாடியார் கொடுத்த புகாரில் கடைசி அம்சமாக இருந்தாலும் கோட்டை வட்டாரத்தை பொறுத்தவரை இது தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கலைஞர் இருந்த போது கோபாலபுரத்தை தாண்டிய அதிகார மையமே கிடையாது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அவர்கள் வாரிசுகள் இருந்தாலும் அரசு எந்திரத்தில் அவர்களால் நேரடியாக தலையிட முடியாத வகையில் கலைஞர் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். இதே போல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது போயஸ்கார்டனில் உள்ள சசிகலாவை தவிர வேறு யாரும் அதிகார மையமாக இருக்க முடியாது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது அவர் மட்டுமே அதிகார மையமாக இருந்தார் ஆனால் இப்போது எழுந்துள்ள புகார் அதிலு ஆளுநர் வரையில் சென்றிருப்பதை முதலமைச்சர் அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட மாட்டார் என்கிறார்கள்.
