Asianet News TamilAsianet News Tamil

ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு .? தமிழக எம்.பி வைத்த அதிரடி கோரிக்கை.. பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் பதில்.

ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு தேதி மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு கல்வி அமைச்சர் பதில் கூறியுள்ளார்.  

CBSE exam on Ramalan? The Union Minister replied that the action request made by the Tamil Nadu MP is being considered.
Author
Chennai, First Published Mar 5, 2021, 12:37 PM IST

ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வுதேதி மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு கல்வி அமைச்சர் பதில் கூறியுள்ளார். 

ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடந்தேறுகிற சூழல் இருப்பதைச் சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் (சி.பி.எம்) கடிதம் எழுதியிருந்தார். அக் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று மத்திய கல்வி அமைச்சர் பதில் அளித்துள்ளார். 

 CBSE exam on Ramalan? The Union Minister replied that the action request made by the Tamil Nadu MP is being considered.

இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாளான ரமலானுக்கு இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது. இந்த தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தார். 

CBSE exam on Ramalan? The Union Minister replied that the action request made by the Tamil Nadu MP is being considered.

இதற்கு பிப்ரவரி 23,2021 தேதியிட்ட கடிதம் மூலம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' அளித்துள்ள பதிலில் "சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதிகளை மாற்றுவது குறித்த உங்கள் பிப்ரவரி 8 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அதன் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி, "எனது கோரிக்கை பரிசீலிக்கப்படுவது மகிழ்ச்சி. நல்ல முடிவு விரைவில் வருமென்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios