மாணவர்களின் பொதுத் தேர்வு கட்டணத்தை சிபிஎஸ்இ அதிரடியாக உயர்த்தி  எத்தரவிட்டுள்ளது. இது தோடர்பாக சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தின்படி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு 1200 ரூபாய்  கட்டணம் செலுத்த வேண்டும், முன்பிருந்த 50 ரூபாயில் இருந்து 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.

பொதுப்பிரிவினருக்கு.750 ரூபாயாக ஆக இருந்த கட்டணம் 1500 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டணம் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்தும் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்குத் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களைக் கொண்ட சிபிஎஸ்இ பள்ளிகள் இதற்கு முன் 5 பாடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இது தற்போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதற்கு இந்திய பெற்றோர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் மாணவர்களின் கல்வி உரிமைக்கு முற்றிலும் எதிரானது என பெற்றோர்கள் கொந்தளித்துள்ளனர்.

ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாக அனைத்து அரசாங்கங்களும் இலவச மற்றும் தரமான பள்ளிக் கல்வியை வழங்க வேண்டும். மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோரின் குடும்ப வருமானம் மாதத்திற்கு 6000 ரூபாய்க்கும்  குறைவாக உள்ளது. 

அத்தகைய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தில் பத்தாம் மற்றும் பனிரண்டாம் வகுப்புக்கான கூடுதல் தேர்வுக் கட்டணத்தை எப்படிச் செலுத்த முடியும் என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.