CBI raids former finance minister P Chidambaram house in Chennai for give an idea to Rajaji
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம், ரஜினியிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், அவரை பாஜகவுக்கு போகவேண்டாம் என்று எச்சரித்ததாகவும், அதன் காரணமாகவே, அவர் வீட்டில் சி.பி.ஐ ரைடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 15 ம் தேதி முதல், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி தமது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு வருகிறார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், 1996 ம் ஆண்டு ஒரு கூட்டணிக்கு தாம் ஆதரவு அளித்தது ஒரு அரசியல் விபத்து என்றும், ஒரு வேளை அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்க முயலும் நபர்களை அருகில் வைத்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி இருந்தார்.
"ஒரு வேளை அரசியலுக்கு வந்தால்" என்று அவர் கூறிய வார்த்தை, மற்றவர்களை சற்று யோசிக்க வைத்தது. அதனால், ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன், அவர் பாஜக வுடன் இணைந்தாலும், தனி கட்சி தொடங்கினாலும் வரவேற்கிறேன் என்றும் மத்திய அமைச்சர் பொன்னார் கூறி இருந்தார்.
இந்நிலையில், ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் ஒருவரான ப.சிதம்பரம், அன்று மாலை ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசி இருக்கிறார்.

அப்போது, நீங்கள் அரசியலுக்கு வந்தால், தனி கட்சியை தொடங்குங்கள், எக்காரணம் கொண்டும், பாஜக வில் இணைய வேண்டாம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
இதை தொடர்ந்தே, மறுநாள், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ நடத்திய சோதனை, ரஜினிக்கு விடப்படும் மிரட்டல் என்று கராத்தே தியாகராஜன் கூறி இருப்பதன் பின்னணி இதுவே என்று, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ரஜினி, அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். அதற்காக அவர் எது பேசினாலும், அதில் ஏதாவது ஒரு உள் அர்த்தம் கற்பிப்பது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.
