Asianet News Tamil

வாய் விட்டு சிக்கிய செம்மலை... வைகோ அறிவிப்பால் நிலைகுலைந்த மோடி, ஜெட்லி, கட்கரி!

சாதிக்பாட்ஷா மரணத்துக்குப் பின் 2ஜி வழக்கு நீர்த்துப் போனது! கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது திட்டமிட்டு பொய் கூறும் தி.மு.க., சாதிக்பாட்ஷா மரண விசாரணைக்கு மீண்டும் தயாரா

cBI investigation ready...semmalai
Author
Tamil Nadu, First Published Jan 13, 2019, 4:15 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

* சாதிக்பாட்ஷா மரணத்துக்குப் பின் 2ஜி வழக்கு நீர்த்துப் போனது! கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது திட்டமிட்டு பொய் கூறும் தி.மு.க., சாதிக்பாட்ஷா மரண விசாரணைக்கு மீண்டும் தயாரா?: செம்மலை. (செம்மல சார் எதுக்கு இந்த சவாலெல்லாம்! பன்னீர்செல்வம் எடப்பாடி கூட  இணைஞ்சப்ப ‘கெட்ட நீரை சுத்தமாக்க மருந்து கலக்கப்பட்டுள்ளது’ன்னு நீங்க சீன் போட்டு எடப்பாடியை வம்பிழுத்தது மறந்து போச்சா? அப்புறம் உங்க மருமகள் உங்க குடும்பம் மேலே கொடுத்த புகார்களின் மறுவிசாரணைக்கு நீங்க தயாரா?ன்னு அவிய்ங்க கேப்பாய்ங்க.)

* ஏ.டி.ஜி.பி. கண் முன்னே அவரது டிரைவரை தாக்கிய ஆலந்தூர் எஞ்சினியர் கைது!: செய்தி. (கடமையைதான் செய்யுறோம்! கண்டிக்கிறோம்!ங்கிற பெயர்ல ஒருத்தனோட குடும்பத்து ஆளுங்க கண்ணெதிரேயே, அவனை போட்டுப் புரட்டி எடுக்கிறதோட வலி இப்போவாச்சும் புரியுமா ஆபீஸர்)

* லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஹும் பார்க்கலாம்: தேவகவுடா 
(விடுங்க தல எதுக்கு லோக்சபாவுல போட்டி போட்டுகிட்டு லோ லோன்னு பிரசாரத்துக்கு அலையணும்? இளவட்ட வயசா நமக்கு! நோகாம ராஜ்யசபாங்கிற பின் வாசல் வழியா பார்லிமெண்டுக்குள்ளே போயி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் துணை பிரதமர் வரைக்கும் வாங்கலாமுங்கிறதுதானே உங்க பிளான்?)

* வாஜ்பாயியின் பெயரை உச்சரிக்க கூட தகுதியில்லாதவர் மோடி. வாஜ்பாய் அணுகுமுறைகளுக்கு நேர் எதிரானவர். பி.ஜே.பி.யுடன் ம.தி.மு.க. கூட்டணி வைக்கும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை. தி.மு.க.வும் வைக்காது: வைகோ. (அண்ணே திடுதிப்புன்னு இப்படி அறிவிச்சிட்டீங்களே. நீங்க கூட்டணிக்கு வர்லேன்னா மோடியும், ஜெட்லியும், கட்கரியும், ராஜ்நாத்தும் தேர்தல்லேயே நிக்கமாட்டாங்களேண்ணே! அருள் கூர்ந்து மறு பரிசீலனை பண்ணுங்கண்ணே, பாராளுமன்றம் தாங்காத முடிவு இது.)

* நாடாளுமன்றத்துக்கும், பார்லிமெண்டுக்கும், ராஜ்யசபாவுக்கும், லோக்சபாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயக்குமார். (எதிர்கட்சி தலைவரை விடுங்கண்ணே, நம்ம ஆளுங்கட்சியில என்ன கிழியுது? கம்பராமாயணத்தை எழுதியவரை தெரியா முதல்வர், தமிழக காட்டில் சிங்கமில்லைங்கிறதே தெரியாத வனத்துறை அமைச்சர்ன்னுதானே வண்டி ஓடிட்டு இருக்குது?)

Follow Us:
Download App:
  • android
  • ios