தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது - உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு!

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தாற்காலிகமாக விநாடிக்கு 2,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 11ந்தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளில் 15.92 டிஎம்சி அளவே தண்ணீர் உள்ளதாகவும், இதனால், கர்நாடகத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், தமிழகத்துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பல்வேறு விளைவுகளை மாநிலம் எதிர்கொள்ளும் நிலைமை உருவாக உள்ளதால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Attachments area