cauvery water issuw kumarasamy not wat cauvery management commission
கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரைத் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.
அது தொடர்பாக டெல்லியில் பேட்டி அளித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காரிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என புது குண்டை தூக்கிப் போட்டார். இதையடுத்து அவர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க முட்டுக்கட்டை போட்டார்.
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி , கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது. கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக பிரச்சினை வந்தால் அதை பார்த்துக்கொள்ள தயார். தீர்ப்பாயம் கூறிய படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்குவதை அமல்படுத்தியுள்ளோம் என குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
