காவிர் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மதிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டிப்பதாகவும், இது தொடர்பாக குதிரை பேர அரசு மௌனமாக இருப்பதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

2018- 19  ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓபிஎஸ் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அவர் எழுந்து பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதுமே, தங்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என திமுக செய்ல தலைவர் ஸ்டாலின் சபாநாயகரிடன் அனுமதி கேட்டார்.

ஆனால் தனபால் அனுமதி வழங்க மறுத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய அரசு இன்றுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும்  தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை எனவும் தெரிவித்தார். இப்பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.